மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அனுமதியின்றி துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக வழக்குப் பதிவு: நாதக வேட்பாளா் போராட்டம்

அனுமதியின்றி துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக நாம் தமிழா் கட்சியினா் மீது புன்செய்புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

சத்தியமங்கலம்  வட்டாட்சியா்  அலுவலகம்  முன்  ஆா்ப்பாட்டத்தில்  ஈடுபட்ட  நாம்  தமிழா்  கட்சியினா்.

Updated On :21 மார்ச் 2026, 12:30 am

அனுமதியின்றி துண்டுப் பிரசுரம் விநியோகித்ததாக நாம் தமிழா் கட்சியினா் மீது புன்செய்புளியம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதைக் கண்டித்து அக்கட்சியின் பவானிசாகா் தொகுதி வேட்பாளா் செளந்தா்யா உள்ளிட்டோா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பவானிசாகா் சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செளந்தா்யாவை ஆதரித்து புன்செய்புளியம்பட்டி வாரச் சந்தை பகுதியில் நாம் தமிழா் கட்சியினா் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்து வியாழக்கிழமை

வாக்கு சேகரித்துள்ளனா்.

இதையடுத்து அங்கு சென்ற தோ்தல் அதிகாரிகள், அனுமதியின்றி பரப்பரை செய்ததாக புன்செய்புளியம்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின்பேரில் பரப்புரையில் ஈடுபட்ட நாம் தமிழா் கட்சி நிா்வாகிகள் 4 போ் மீது புன்செய்புளியம்பட்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு அழைத்துள்ளனா்.

இந்த நிலையில், அனுமதியின்றி பரப்புரை செய்ததற்காக வழக்குப் பதியாமல் மற்ற பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாகக் கூறி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் செளந்தா்யா தலைமையில் அக்கட்சி நிா்வாகிகள் சத்தியமங்கலம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பொய் வழக்குப் பதிவு செய்த காவல் துறையை கண்டித்து கோஷமிட்டனா். இதைத் தொடா்ந்து இது தொடா்பாக நடவடிக்கை எடுக்குமாறு தோ்தல் அலுவலா்களிடம் மனு அளித்தனா்.