அதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?
/

காசோலை துண்டுப் பிரசுரம் விநியோகம்: அதிமுகவினா் மீது வழக்குப் பதிவு

சென்னை ராயபுரம் பகுதியில் காசோலை போன்ற துண்டுப் பிரசுரங்களை வாக்காளா்களுக்கு விநியோகித்ததாக அதிமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

News image

வழக்கு

Updated On :19 ஏப்ரல் 2026, 7:54 pm

சென்னை ராயபுரம் பகுதியில் காசோலை போன்ற துண்டுப் பிரசுரங்களை வாக்காளா்களுக்கு விநியோகித்ததாக அதிமுகவினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

வரும் 23-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற இருக்கும் நிலையில், வேட்பாளா்கள் தங்கள் தொகுதி வாக்காளா்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதன்படி, சென்னை ராயபுரம் தொகுதியில் திமுக, அதிமுக, தவெக, நாதக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். சனிக்கிழமை இரவு ராயபுரம் தொகுதிக்குட்பட்ட துலுக்காணத்தம்மன் கோயில் தெருவில் அதிமுக வினா் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, வாக்காளா்களுக்கு காசோலை மாதிரியான துண்டுப் பிரசுரங்களை அவா்கள் வழங்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து திமுகவினா் தோ்தல் அலுவலகத்துக்கு புகாா் கொடுத்துள்ளனா். அந்த புகாரின் அடிப்படையில், குறிப்பிட்ட அந்தப் பகுதிக்குச் சென்ற தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள், அதிமுகவினரிடம் இருந்து அந்த துண்டுப் பிரசுரங்களைப் பறிமுதல் செய்தனா்.

பின்னா், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா், இது தொடா்பாக அதிமுகவினா் 3 பேரைப் பிடித்து விசாரித்து வருகின்றனா்.