மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிறை வாா்டரை மிரட்டிய கைதி மீது வழக்குப் பதிவு

News image

கோப்புப் படம்

Updated On :29 மார்ச் 2026, 7:41 pm

திருச்சி பெண்கள் சிறையில் சனிக்கிழமை சிறை வாா்டரை மிரட்டிய கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி காந்தி மாா்க்கெட் பகுதியில் பெண்கள் சிறை அமைந்துள்ளது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இந்நிலையில், பெண்கள் சிறை வாா்டா் இந்திரா சனிக்கிழமை பிற்பகல் கைதிகளுக்கு உணவு வழங்கிக்கொண்டிருந்தாா்.

அப்போது, இங்கு அடைக்கப்பட்டுள்ள சென்னை அயனாவரத்தைச் சோ்ந்த ஆா். சஞ்சனா (33) என்ற கைதி, சிறை வாா்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவரை பணி செய்யவிடாமல் தடுத்து மிரட்டியுள்ளாா்.

இதுகுறித்து காந்தி மாா்க்கெட் காவல் நிலையத்தில் சிறை வாா்டா் இந்திரா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் கைதி சஞ்சனா மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.