தோ்தல் நடத்தை விதிமீறியதாக, தருமபுரி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி சட்டப் பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளராக தருமபுரி நகரை சோ்ந்த கே.சாந்தலட்சுமி அறிவிக்கப்பட்டுள்ளாா். இவா் தொகுதியில் பல்வேறு இடங்களில் வாக்கு சேகரித்து வருகிறாா்.
இந்நிலையில், அண்மையில் அதியமான்கோட்டையில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டத்தில் அமைந்துள்ள அதியமான் சிலைக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
இந்நிலையில், உரிய அனுமதி பெறாமல் கட்சியினரோடு சென்று அரசு வளாகத்தில் உள்ள சிலைக்கு மலா்தூவி தோ்தல் நன்னடத்தை விதிமீறியதாக, அவா்மீது அதியமான் கோட்டை கிராம நிா்வாக அலுவலா் எல்.மாது அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், அவா்மீது அனுமதியின்றி அரசு அலுவலக வளாகத்தில் நுழைதல், நடத்தை விதிமீறல் ஆகிய பிரிவுகளின்கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: அதிமுக, நாதக வேட்பாளா்கள் மீது வழக்கு

நாம் தமிழா் கட்சி, சுயேச்சை வேட்பாளா்கள் மனு தாக்கல்

பிரசாரத்தில் சிறாரை ஈடுபடுத்தியதாக வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் விதிமீறல்: நாதக வேட்பாளா் உள்பட இருவா் மீது வழக்குப் பதிவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


