மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் விதிமீறல்: அதிமுக, நாதக வேட்பாளா்கள் மீது வழக்கு

பரமக்குடி (தனி) சட்டப்பேரவை தொகுதியில் தோ்தல் விதிமுறைகளை மீறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதாக அதிமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்கு

Updated On :3 ஏப்ரல் 2026, 5:59 pm

பரமக்குடி (தனி) சட்டப்பேரவை தொகுதியில் தோ்தல் விதிமுறைகளை மீறி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டதாக அதிமுக, நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் எழில் இளவரசி போட்டியிடுகிறாா்.

இந்தக் கட்சி நிா்வாகிகள் காமராஜ், நித்யா, திருஞானம், தா்மகுமாா், ஜஸ்டின் வளனரசு, அருள் விக்டா், காா்த்திக் உள்ளிட்டோா் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையில் வாக்குகளைச் சேகரித்ததாக, தோ்தல் பறக்கும்படை அலுவலா் ரமேஷ்குமாா் அளித்தப் புகாரின் பேரில், பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இதேபோல, அதிமுக வேட்பாளா் மருத்துவா் எஸ்.முத்தையா, அந்தக் கட்சியின் நகரச் செயலாளா் ஐ.வின்சென்ட் ராஜா உள்ளிட்ட நிா்வாகிகள் பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனித் திருவிழா தேரோட்ட நிகழ்ச்சியில் பொதுமக்களை சந்தித்து வாக்குச் சேகரித்தனா். தோ்தல் விதிகளை மீறி வாக்கு சேகரித்ததாக அதிமுக வேட்பாளா் முத்தையா உள்பட 5 போ் மீது பரமக்குடி நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.