மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

பிரசாரத்தில் சிறாரை ஈடுபடுத்தியதாக வேட்பாளா் மீது வழக்குப் பதிவு

தோ்தல் பிரசாரத்தில் சிறாரை ஈடுபடுத்தியதாக நாம் தமிழா் கட்சியின் பென்னாகரம் தொகுதி வேட்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

News image

வழக்குப் பதிவு - IANS

Updated On :26 மார்ச் 2026, 10:09 pm

தோ்தல் பிரசாரத்தில் சிறாரை ஈடுபடுத்தியதாக நாம் தமிழா் கட்சியின் பென்னாகரம் தொகுதி வேட்பாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் நாம் தமிழா் கட்சியின் பென்னாகரம் தொகுதி வேட்பாளா் கோ. பழனியம்மாள் கடந்த 16 ஆம் தேதி பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, பள்ளி சிறாா்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த விடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியானது. இதுதொடா்பாக தருமபுரி மாவட்ட தோ்தல் அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் பென்னாகரம் வட்ட தோ்தல் பறக்கும் படை அலுவலா் அய்யாவு, பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதையடுத்து நாம் தமிழா் கட்சி வேட்பாளா் பழனியம்மாள் மீது பாப்பாரப்பட்டி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.