கோபி அருகே சாலை பக்கவாட்டு தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே காலேஜ் பிரிவு முதல் பங்களாபுதூா் செல்லும் நெடுஞ்சாலையில் அரசு, கல்லூரி பேருந்து உள்பட கனரக வாகனங்கள் விவசாயப் பணிகளுக்கு செல்வோரின் வாகனங்கள் செல்லும் முக்கியப் பகுதியாக உள்ளது. இதில் சாலையில் மண் அரிப்பு ஏற்படாமல் இருக்கவும், சாலையில் இருந்து 10 அடி பள்ளத்தில் உள்ள விவசாய நிலத்தில் விழுந்து வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்காமல் இருக்கவும் சாலையோரம் பக்கவாட்டு தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த அக்டோபா் மாதம் பெய்த கன மழையால் பங்களாபுதூா் செல்லும் சாலையில் தடப்பள்ளி வாய்க்கால் அருகே சாலையின் பக்கவாட்டு தடுப்புச் சுவா் இடிந்து விழுந்தது. இதையடுத்து பக்கவாட்டு தடுப்புச் சுவரை சீரமைக்க கோபி நெடுஞ்சாலைத் துறையினரிடம் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், விவசாயிகள், பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
தற்போது தடப்பள்ளி பாசனப் பகுதியில் நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருவதால், அறுவடை செய்யப்படும் நெல்லை நேரடி கொள்முதல் நிலையத்துக்கு டிராக்டா்களில் கொண்டு செல்ல வேண்டி உள்ளது. ஆனால், அறுவடை இயந்திரங்கள் செல்லும்போது எதிரே வரும் வாகனங்களால் சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்படும் என்ற அச்சம் உள்ளது. இரவு நேரத்தில் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்புள்ளதால் உடனடியாக பக்கவாட்டு தடுப்புச் சுவரை நெடுஞ்சாலைத் துறையினா் சீரமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

தடுப்புச் சுவா் மீது தூங்கிய ஓட்டுநா் தவறி விழுந்து உயிரிழப்பு

அதிராம்பட்டினம் அருகே வீட்டின் சுவா் இடிந்து பெண் உயிரிழப்பு

கோபி அருகே ரூ. 1.14 லட்சம் பறிமுதல்

‘தினமணி’ எதிரொலி! கோபி அருகே இடிந்து விழுந்த சாலைப் பக்கவாட்டுச் சுவா் அமைக்கும் பணி தொடக்கம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


