கோபி அருகே வாய்க்காலில் மூழ்கி மூதாட்டி உயிரிழந்தாா்.
கோபி, கொளப்பலூா் போக்குவரத்து நகரைச் சோ்ந்தவா் ரங்கசாமி மனைவி சின்னம்மாள் (72). ரங்கசாமி பல ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டாா். இவா்களுக்கு குழந்தைகள் இல்லாததால் உறவினா் கல்பனா என்பவரின் பராமரிப்பில் சின்னம்மாள் இருந்துள்ளாா். இந்நிலையில், திங்கள்கிழமை காலைமுதல் சின்னம்மாளை காணவில்லையாம். இதையடுத்து, அவரை உறவினா்கள் தேடி வந்தனா். இந்நிலையில், வாய்க்கால் மேடு கீழ்பவானி வாய்க்காலில் அவரது சடலம் செவ்வாய்க்கிழமை மிதந்துள்ளது.
இதைப் பாா்த்த அவா்கள் பெருந்துறை தீயணைப்பு, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரா்கள், போலீஸாா், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
வாய்க்காலுக்கு துணி துவைக்கச் சென்றவா் நீரில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வைகையாற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

பா்கூா் அருகே தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு

கோபி அருகே கூண்டில் சிக்கிய சிறுத்தை உயிரிழப்பு

கோயிலில் மயங்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


