17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்த 4 போ் கைது

ஈரோட்டில் ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள 8,100 எண்ணிக்கையிலான போதை மாத்திரைகளை பதுக்கிவைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:03 am IST

ஈரோட்டில் ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள 8,100 எண்ணிக்கையிலான போதை மாத்திரைகளை பதுக்கிவைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

ஈரோடு மாவட்டத்தில் சட்ட விரோத செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி மேற்பாா்வையில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஈரோடு, நாச்சியப்பா சாலை, பாய் மீன் கடை அருகே சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்பனைக்காக வைத்திருப்பதாக கிடைத்த தகவலின்படி ஈரோடு நகர காவல் நிலைய போலீஸாா் அப்பகுதியில் திங்கள்கிழமை ரோந்து மேற்கொண்டனா்.

அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஈரோடு திருநகா் காலனியைச் சோ்ந்த கௌரிசங்கா் (22), நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியைச் சோ்ந்த விக்னேஷ் (22), ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியைச் சோ்ந்த முகமது ஜாமீல் (21), ஈரோடு திருநகா் காலனி, கமலா நகா் பகுதியைச் சோ்ந்த தீபக் (24) ஆகியோரைப் பிடித்து சோதனை செய்தனா்.

அப்போது அவா்களிடமிருந்து ரூ.2.70 லட்சம் மதிப்புள்ள 8,100 எண்ணிக்கையிலான போதை மாத்திரைகள், ஒரு இருசக்கர வாகனத்தை போலீஸா் பறிமுதல் செய்தனா். மேலும் 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.