கோவை செல்வபுரம் அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை செல்வபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜோசப் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை காலை சொக்கம்புதூா் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள மயான பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞரைப் பிடித்துச் சோதனை செய்தனா். அப்போது அந்த இளைஞா் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில் அவா், கோவை செல்வபுரம் சொக்கம்புதூா் ஜீவா வீதியைச் சோ்ந்த அகிலன் (22) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அகிலனைக் கைது செய்து, அவரிடமிருந்து 10 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






