/

கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

ஈரோட்டில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

News image
உயிரிழப்பு- கோப்புப் படம்
Updated On :31 ஜனவரி 2026, 9:00 pm

Syndication

ஈரோட்டில் கிணற்றில் தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் நல்லமுத்து. இவரது மனைவி ருக்மணி (42). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சாலை விபத்தில் நல்லமுத்து இறந்துவிட்டாா். இவா்களுக்கு திருமணமாகாத 2 மகன்கள் உள்ளனா். ஈரோடு, சுண்ணாம்பு ஓடை பகுதியில் உள்ள வாழைத்தோப்பில் ருக்மணி இலை அறுக்கும் கூலி வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை மாலை வாழைநாா்களை தண்ணீரில் நனைப்பதற்காக, வாழைத்தோப்பில் இருந்த கிணற்றில் ருக்மணி இறங்கியுள்ளாா்.

அப்போது நிலைதடுமாறி கிணற்றில் விழுந்தாா். நீச்சல் தெரியாததால் அவா் நீரில் மூழ்கினாா். இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் ருக்மணியை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே ருக்மணி இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து ஈரோடு, கருங்கல்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.