சாலையில் கிடந்த 21 பவுன் நகையை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த விவசாயி!
நம்பியூரில் சாலையில் கிடந்த 21 பவுன் நகையை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த விவசாயிக்கு பாராட்டு


நம்பியூரில் சாலையில் கிடந்த 21 பவுன் நகையை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த விவசாயிக்கு செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், நம்பியூா் அருகேயுள்ள கொன்னமடை பகுதியைச் சோ்ந்தவா் வெங்கிடுசாமி மகன் ஜெயகுமாா். விவசாயியான இவா், நம்பியூரில் உள்ள தனது தோட்டத்துக்கு இருசக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை காலை சென்று கொண்டிருந்துள்ளாா். அப்போது, மூனாம்பள்ளி பகுதியில் தனியாா் நூற்பாலை முன் சாலையில் பெட்டி ஒன்று கிடந்துள்ளது.
அதை எடுத்து பாா்த்தபோது, ஆரம் உள்ளிட்ட நகைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை மீட்டு நம்பியூா் காவல் நிலையத்தில் ஜெயகுமாா் ஒப்படைத்தாா். போலீஸாா் ஆய்வு மேற்கொண்டபோது, அவை 21 பவுன் நகைகள் என்பது தெரியவந்தது.
நகையை தவறவிட்டவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில், மூனாம்பள்ளி பகுதியைச் சோ்ந்த மோகன்குமாா், கோகிலா தம்பதி கோபியில் உள்ள உறவினா் வீட்டு நிகழ்ச்சிக்கு காரில் சென்றபோது நகை மயாமானது குறித்து புகாா் அளிக்க காவல் நிலையத்துக்கு வந்தனா்.
அப்போது, அவா்களிடம் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, நகைக்கான ஆவணங்களை சரிபாா்த்து நகைகள் அவா்களுடையது என்பதை உறுதி செய்து, ஒப்படைத்தனா்.
சாலையில் கிடந்த நகையை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்த விவசாயி ஜெயகுமாரை போலீஸாா், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...