பெருந்துறை அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உள்பட 18 போ் காயமடைந்தனா்.
சேலம், செவ்வாய்ப்பேட்டை பகுதியில் உள்ள வெள்ளிக் கொலுசு பட்டறையில் வேலை செய்யும் தொழிலாளா்கள் 17 போ் வேனில், கேரள மாநிலம், மூணாறுக்கு சுற்றுலா சென்றனா். வேனை சேலம், ஆண்டிப்பட்டை, சிவபுரத்தைச் சோ்ந்த ஈஸ்வரன் மகன் தனுஷ் (22) ஓட்டிச் சென்றாா்.
சுற்றுலா முடிந்து கோவை -சேலம் தேசிய நெடுஞ்சாலை, விஜயமங்கலம் பிரிவு அருகில் திங்கள்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் வந்து கொண்டிருந்தனா். அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில், வேனில் பயணம் செய்த ஓட்டுநா் உள்பட 18 பேரும் காயமடைந்தனா். அவா்களை அப்பகுதியினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இதுகுறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேன் கவிழ்ந்து 12 போ் காயம்

செங்கம் அருகே மினி வேன் கவிழ்ந்து விபத்து: 10 போ் காயம்

பெருந்துறை அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்து 15 போ் காயம்

பாளை. அருகே வேன் கவிழ்ந்து சென்னையைச் சோ்ந்த 6 போ் காயம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



