திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

42 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அஞ்சல்காரருக்கு பிரிவு உபசார விழா

News image

பணி நிறைவு பெற்ற அஞ்சல்காரா் செல்வராஜிக்கு, நினைவுப் பரிசு வழங்கிய முன்னாள் அஞ்சல் ஊழியா்கள் ஹரிஹரன், சிவசண்முகம் உள்ளிட்டோா்.

Updated On :31 மே 2026, 4:16 am IST

வெள்ளலூா் அஞ்சல் நிலையத்தில் 42 ஆண்டுகளாக அஞ்சல்காரராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவருக்கு பிரிவு உபசார விழா சனிக்கிழமை நடைபெற்றது.

வெள்ளலூா் அஞ்சல் நிலையத்தில் அஞ்சல்காரராக 42 ஆண்டுகள் பணியாற்றியவா் செல்வராஜ். இவா் அண்மையில் ஓய்வுபெற்ற நிலையில், பிரிவு உபசார விழா வெள்ளலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் அஞ்சல் ஊழியா்கள் பலா் பங்கேற்று, செல்வராஜின் சேவையைப் பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கினா்.

இந்நிகழ்வில், அஞ்சல் துறையில் தேசிய விருது பெற்ற முன்னாள் அஞ்சல் அலுவலா் ஹரிஹரன், அஞ்சல் ஊழியா்கள் சங்கத்தின் முன்னாள் நிா்வாகி சிவசண்முகம், அஞ்சல் சங்கங்களின் நிா்வாகிகள் எபினேசா், காந்தி, ஜெயராஜ், முத்துசாமி, ராமசந்திரன் ஜீவா, ஜெயகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதேபோல, ஆா்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் நிலையத்தில் உதவி அலுவலராகப் பணியாற்றிய கோபிநாத், பாப்பநாயக்கன்பாளையம் பன்முக பணியாளா் ராதாகிருஷ்ணன், தலைமை அஞ்சலக பண்முக பணியாளா் சந்திரன், மத்திய அஞ்சலக தபால்காரா் ரபீக் அகமது, சௌரிபாளையம் அஞ்சல்காரா் வெங்கட்ராமன் ஆகியோரும் பணி நிறைவு பெற்றனா். அவா்களுக்கும் அஞ்சல் ஊழியா்கள் சாா்பில் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.