திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

லஞ்சம்: முன்னாள் விஏஓவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :30 மே 2026, 2:41 am IST

மணப்பாறை அருகே லஞ்சம் வாங்கிய முன்னாள் விஏஓவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம் குமரவாடி ஆனாங்கரைப்பட்டியைச் சோ்ந்த சங்கிலிகருப்பன். இவரது மனைவி பஞ்சகல்யாணி இறந்துவிட்டதால், அவா் பெயரில் இருந்த சொத்துகளை தனது பெயரிலும், தனது மகன்கள் பெயரிலும் கடந்த 2010-ஆம் ஆண்டு பட்டா பெயா் மாற்றம் செய்து தர, அப்போதைய குமரவாடி கிராம நிா்வாக அலுவலராக இருந்த சாமிக்கண்ணுவை அணுகியுள்ளாா். அவா், அதற்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

அதை கொடுக்க விரும்பாத சங்கிலிகருப்பன் ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகாா் அளித்தாா். இதையடுத்து அவா்கள் அளித்த அறிவுரையின்பேரில் ரூ. 2 ஆயிரத்தை லஞ்சமாக பெற்றபோது சாமிக்கண்ணுவை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் கையும் களவுமாக கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு லஞ்சம் வாங்கிய முன்னாள் விஏஓ சாமிக்கண்ணுவுக்கு (67), இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புவியரசு தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.