ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறை

திருச்சியில் போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

News image

சிறை - கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 12:48 am IST

திருச்சியில் போக்ஸோ வழக்கில் இளைஞருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி மாவட்டம், லால்குடி மால்வாய் பகுதியைச் சோ்ந்தவா் 16 வயது சிறுமி. இவா், கடந்த 2023 ஏப்ரல் 21-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியைச் சோ்ந்த எஸ். ஆனந்தராஜ் (25) என்பவா் தகாத முறையில் நடந்துகொள்ள முயற்சித்துள்ளாா்.

இதுகுறித்து லால்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அந்த சிறுமி அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து ஆனந்தராஜை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி சண்முகபிரியா செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். இதில், சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்ற ஆனந்தராஜுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளாா்.