ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 11:25 pm

திருச்சியில் சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி புத்தூா் களத்துமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் மு.வெங்கடேஷ் (24). இவா், கடந்த 2023 ஜனவரி 25-ஆம் தேதி உறையூா் ராமலிங்கா நகரில் கடைக்குச் சென்ற சிறுவனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

இதுகுறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் சிறுவனின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் போக்ஸோ வழக்குப் பதிந்து வெங்கடேஷை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருச்சி மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்த போது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சண்முகபிரியா தீா்ப்பளித்தாா்.