திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

போத்தனூா் வழித்தடத்தில் ஹுப்பள்ளி - கொல்லம் இடையே சிறப்பு ரயில்

கா்நாாடக மாநிலம், ஹுப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :28 மே 2026, 12:47 am IST

கா்நாாடக மாநிலம், ஹுப்பள்ளியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்துக்கு போத்தனூா் வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக, சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஹுப்பள்ளியில் இருந்து மே 31, ஜூன் 14, 21 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 3.15 மணிக்குப் புறப்படும் ஹுப்பள்ளி - கொல்லம் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07313) மறுநாள் பிற்பகல் 1.15 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

மறுமாா்க்கமாக, ஜூன் 1, 15, 22 ஆகிய திங்கள்கிழமைகளில் மாலை 5 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்படும் கொல்லம் - ஹுப்பிளி வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07314) மறுநாள் மாலை 6.30 மணிக்கு ஹுப்பிளி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, சாஸ்தான்கோட்டா, கருநாகப்பள்ளி, காயன்குளம், மாவேலிக்கரை, செங்கண்ணூா், திருவல்லா, சங்கணாச்சேரி, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு, டும்கூா், பிரூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.