திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

போத்தனூா் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில் சேவை நீடிப்பு

போத்தனூா்- சென்னை சென்ட்ரல் நிலையம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை 9 நாள்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :16 மே 2026, 3:21 am IST

போத்தனூா்- சென்னை சென்ட்ரல் நிலையம் இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் சேவை 9 நாள்களுக்கு நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது குறித்த அறிவிப்பு விவரம்: போத்தனூரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், வரும் 20, 21, 23, 28, 29, 30 மற்றும் ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில் (புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில்) காலை 7.40 மணிக்கு போத்தனூரிலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் (எண் 06028) அன்று மாலை 4.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையம் வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 20, 21, 23, 28, 29, 30 மற்றும் ஜூன் 3, 4, 5 ஆகிய தேதிகளில் மாலை 5.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில்கள் (எண் 06027) மறுநாள் அதிகாலை 3 மணிக்கு போத்தனூா் நிலையத்தைச் சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.