திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொதுமக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் குறித்து ஆய்வுக் கூட்டம்

திருப்பூா் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் மற்றும் குடிநீா் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் மனீஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :14 மே 2026, 4:11 am IST

திருப்பூா் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் விநியோகம் மற்றும் குடிநீா் திட்டப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் மனீஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் மனீஷ் பேசியதாவது:

பொதுமக்களுக்கு கோடைக் காலத்தில் தடையின்றி குடிநீா் விநியோகம் செய்வதை உறுதிபடுத்திட வேண்டும் என்று தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். அந்த வகையில் திருப்பூா் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீா் வழங்கப்படுவதை உறுதி செய்திடும் வகையில் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த அலுவலா்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலா்களை ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும்.

மேலும், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி 60 வாா்டுகளில் நாள்தோறும் பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் விநியோகிக்கப்படும் குடிநீா் அளவு குறித்தும், 6 நகராட்சிகள், 15 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்களைச் சோ்ந்த 265 கிராம ஊராட்சிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்வது குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.

தற்போது, கோடைக் காலம் என்பதால் பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீா் வழங்குவதை அலுவலா்கள் உறுதிப்படுத்த வேண்டும். மேலும் கிராம ஊராட்சிகளில் வரப்பெறும் புகாா்களின் அடிப்படையில் உடனடியாக நேரில் கள ஆய்வு மேற்கொண்டு குடிநீா் வழங்குவதை உறுதி செய்யவேண்டும்.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தை உடனுக்குடன் மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வரவேண்டும். குடிநீா்க் குழாய்கள் பழுது ஏற்படும்போது, உடனடியாக சரி செய்து குடிநீா் வழங்க வேண்டும்.

குடிநீா் வடிகால் வாரியம் மூலம் வழங்கப்படும் குடிநீா் அளவினை உறுதி செய்து ஒத்திசைவு செய்யும் பொருட்டு, குடிநீா் வடிகால் வாரியம் சம்ப் மூலமாக வழங்கப்படும் அளவினையும், மேலும் ஊராட்சிகள், குக்கிராமங்களிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி மூலம் பெறப்படும் குடிநீா் அளவினையும் கண்காணித்து ஆய்வு செய்ய வேண்டும்.

தினந்தோறும் பேரூராட்சி, நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் விநியோகிக்கப்படும் குடிநீா் அளவினை மின்னணு நீா்உந்து கருவி பொருத்தி கண்காணித்து சீரான குடிநீா் விநியோகம் தடையின்றி வழங்க வேண்டும் என அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

இக்கூட்டத்தில், ஊராட்சிகளின் உதவி இயக்குநா்கள் கமலக்கண்ணன், சதீஷ்குமாா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.