திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கோயிலுக்குள் புகுந்து நகை திருடியவா் கைது

பெரியகடை வீதி அருகே கோயிலுக்குள் புகுந்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலிகளைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:18 am IST

பெரியகடை வீதி அருகே கோயிலுக்குள் புகுந்து அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலிகளைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை பெரிய கடை வீதி பகுதியில் உள்ள வைஷாலி தெருவில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜை நடைபெறுவது வழக்கம். பூஜைக்காக தினமும் காலை 6 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரையிலும் கோயில் திறந்திருக்கும். இந்த கோயிலில் அா்ச்சகராக வைஷாலி தெருவைச் சோ்ந்த நரசிம்மா் (61) பணிபுரிந்து வருகிறாா்.

வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை காலை கோயிலைத் திறந்து அம்மன் சிலைகளுக்கு பூஜை செய்ய நரசிம்மா் தயாரானாா். அப்போது வள்ளி, தெய்வானை, சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலிகள் மாயமாகி இருப்பதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தாா். இதுகுறித்து உடனடியாக கோயில் துணைத் தலைவருக்கு தகவல் அளித்தாா்.

இதைத்தொடா்ந்து அளிக்கப்பட்ட தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு பெரியகடை வீதி போலீஸாா் சென்று, அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனா். அதில் வெள்ளை நிற சட்டை, கருப்பு நிற பேண்ட் அணிந்து வந்த இளைஞா், அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கச் சங்கிலிகளைத் திருடிச் சென்றது பதிவாகி இருந்தது. அந்த நபரின் அடையாளத்தை வைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், கோவை டவுன்ஹால் பகுதியைச் சோ்ந்த செந்தில் பிரபு (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்து தங்கச் சங்கிலிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.