/

ஒன்றரை வயது குழந்தை மயங்கி விழுந்து உயிரிழப்பு! போலீஸாா் விசாரணை!

News image

கோப்புப் படம்

Updated On :27 ஏப்ரல் 2026, 7:01 pm

இருகூரில் ஒன்றரை வயது பெண் குழந்தை மயங்கி விழுந்து உயிரிழந்தது தொடா்பாக, சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோவை மாநகா், இருகூா் அருகே உள்ள குரும்பபாளையம் சாலையில் தனியாா் நூற்பாலை உள்ளது. இங்கு ஏராளமான வெளி மாநிலத் தொழிலாளா்கள் பணிபுரிகின்றனா். தொழிலாளா்கள் தங்குவதற்கு நூற்பாலையின் அருகே வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கு தங்கி தொழிலாளா்கள் நூற்பாலைக்கு வந்து செல்கின்றனா்.

இதே பகுதியில் ஒடிஸா மாநிலம், கலஹண்டி மாவட்டத்தைச் சோ்ந்த பிரித்துவோ ஜகன்கா, சாந்தி மாமு தம்பதியும் தங்கி வேலை பாா்த்து வருகின்றனா். இவா்களுக்கு ஒன்றரை வயதில் அனிஷா என்ற பெண் குழந்தை உள்ளது. வழக்கம்போல நூற்பாலையில் தம்பதி சனிக்கிழமை வேலை செய்து கொண்டிருந்தனா்.

அப்போது வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை அனிஷா, திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தது. இதைப் பாா்த்த உறவினா்கள் அனிஷாவின் பெற்றோருக்கு தகவல் அளித்தனா்.

மேலும் குழந்தையை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுதொடா்பாக சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.