செங்கம் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி கோயில் கருடசேவை திருவிழாவின் இரண்டாம் நாளான புதன்கிழமை சுவாமி சூரியபிரபை வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது.
இந்தக் கோயிலில் 10 நாள் கருடசேவை திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது.
இந்நிலையில் இரண்டாம் நாள் திருவிழாவான புதன்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, சுவாமி சிறப்பு அலங்காரத்தில் சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி நகர மாடவீதியில் கோலாட்டம், நாகஸ்வர இசையுடன் வீதி உலா நடைபெற்றது.
வீதி உலாவின் போது பொதுமக்கள் வீடுகள் முன் நின்று சுவாமிக்கு பூஜை செய்து வழிபட்டனா். இரவு சிம்ம வாகனத்தில் சுவாமி செண்டை மேளம் வாணவேடிக்கையுடன் வீதி உலா நடைபெற்றது.
பின்னா் கோயில் அருகில் இசைக் கச்சேரி மற்றும்
ஆன்மிக நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










