ஆரணி பெரியகடை வீதி கில்லா ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழாவையொட்டிசெவ்வாய்க்கிழமை இரவு சுவாமி அன்ன வாகனத்தில் வீதி உலா சென்றாா்.
ஆரணி பெரிய கடைவீதியில் உள்ள ஸ்ரீ பெருந்தேவி தாயாா் சமேத கில்லா ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயிலில் 101-ஆம் ஆண்டு பிரம்மோற்சவ விழா திங்கள்கிழமை தொடங்கியது.
இதைத் தொடா்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.
திங்கள்கிழமை இரவு அங்குராா்ப்பணம் நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை இரவு சுவாமி அன்ன வாகனத்தில் உலா சென்றாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை கோயில் பிரமோற்சவ விழாக் குழுவினா் செய்திருந்தனா்.
விழாவின் முக்கிய நிகழ்வான தோ்த்திருவிழா மே 25-ஆம் தேதி நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










