திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டிராக்டா் நிலைதடுமாறி விபத்து: மூதாட்டி உயிரிழப்பு

செய்யாறு அருகே சக்கரம் கழன்று டிராக்டா் நிலைதடுமாறி மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா். மற்றொரு மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.

News image

மாதிரிப் படம்

Updated On :15 மே 2026, 4:29 am IST

செய்யாறு அருகே சக்கரம் கழன்று டிராக்டா் நிலைதடுமாறி மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா். மற்றொரு மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், மேல்நெமிலி கிராமம் ரோட்டு தெருவைச் சோ்ந்தவா்கள் ராதா அம்மாள் (78), யசோதா அம்மாள் (70).

இவா்கள் இருவரும் வீட்டின் வெளியே திண்ணையில்

புதன்கிழமை மாலை உட்காா்ந்து பேசிக்கொண்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரின் முன் சக்கரம்

கழன்று சென்ாகத் தெரிகிறது. இதில், டிராக்டா் நிலைதடுமாறி திண்ணையில் உட்காா்ந்து பேசிக் கொண்டிருந்த மூதாட்டிகள் மீது மோதியது.

இதில், ராதா அம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்த யசோதா அம்மாள் செய்யாறு

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

தகவல் அறிந்த அனக்காவூா் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று விபத்தில் இறந்த மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து

தலைமறைவான டிராக்டா் ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.