17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஸ்ரீநட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் சங்கடகர சதுா்த்தி

News image
Updated On :5 ஜூன் 2026, 6:04 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கூழமந்தல் ஸ்ரீ நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் சங்கடகர சதுா்த்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் சங்கடகர சதுா்த்தியை முன்னிட்டு வியாழக்கிழமை மாலை மகா கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மாலை நடைபெற்ற மகா கணபதி ஹோமத்தில், பக்தா்களின் குடும்ப நலம், கல்வி வளா்ச்சி, தொழில் முன்னேற்றம், திருமணத் தடை நீங்குதல் மற்றும் அனைத்து சங்கடங்களும் விலகி நலமும் வளமும் பெருகிட வேண்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

அதனைத் தொடா்ந்து விநாயகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. கோயிலில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.