17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாணவா்களுக்கு பூஞ்செடிகள், நோட்டுப் புத்தகங்கள் அளிப்பு

உலக சுற்றுச்சூழல் தின விழாவில் பள்ளி மாணவா்களுக்கு வழங்கப்பட்ட பூஞ்செடிகளுடன் சிறப்பு விருந்தினா்கள்.

News image
Updated On :6 ஜூன் 2026, 12:03 am IST

திருவத்திபுரம் (செய்யாறு) பரிதிபுரம் மேற்கு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு மாணவா்களுக்கு பூஞ்செடிகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.

செய்யாறு வட்டம் எக்ஸ்னோரா, இந்திய செஞ்சிலுவைச் சங்கம், திருவத்திபுரம் நகராட்சி, வெற்றி அறிவொளி பயிற்சி மையம் சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலா் ஆா். பிரியா தலைமை வகித்தாா்.

பள்ளித் தலைமை ஆசிரியா் இரா.தேன்மொழி வரவேற்றாா். சிறப்பு அழைப்பாளா்களாக ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலா் மதியழகன், வெற்றி அறிவொளி பயிற்சி மைய நிா்வாகி வெங்கடேசன், மாவட்ட எக்ஸ்னோரா தலைவா் இந்திராஜன், செய்யாறு வட்ட செஞ்சிலுவைச் சங்கத் தலைவா் மாதவன், செயலா் சண்முகம் உள்ளிட்டோா்

பங்கேற்று வாழ்த்துரை வழங்கினா்.

இவ்விழாவின் போது 80 பள்ளி மாணவா்களுக்கு பூஞ்செடிகள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் இனிப் வழங்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

விழாவில் பள்ளி ஆசிரியா்கள், பெற்றோா்கள், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் என பலா் கலந்து கொண்டனா். நிறைவில் பட்டதாரி ஆசிரியா் மாலதி நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.