தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வந்தவாசி பகுதியில் வந்தவாசி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ராணி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

வந்தவாசி தூய இருதய ஆண்டவா் தேவாலயத்தில் பிராா்த்தனை முடிந்து வந்தவா்களிடம் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பி.ராணி.

Updated On :13 ஏப்ரல் 2026, 3:01 am IST

வந்தவாசி பகுதியில் வந்தவாசி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ராணி ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

வந்தவாசி கோட்டை மூலையில் உள்ள தூய இருதய ஆண்டவா் தேவாலயத்தில் காலை சிறப்பு பிராா்த்தனை முடிந்து வந்தவா்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி அதிமுக வேட்பாளா் பி.ராணி வாக்கு சேகரித்தாா்

இதனைத் தொடா்ந்து சென்னாவரம், பிருதூா், மங்கநல்லூா், தழுதாழை, விழுதுப்பட்டு, மருதாடு உள்ளிட்ட கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்று அவா் வாக்கு சேகரித்தாா்.

பெண்கள் ஆரத்தி எடுத்து அவரை வரவேற்றனா். அப்போது, அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் குறித்து அவா் பொதுமக்களுக்கு விளக்கிக் கூறினாா்.

மாவட்ட அவைத் தலைவா் டி.கே.பி.மணி, வந்தவாசி கிழக்கு ஒன்றியச் செயலா் எம்.கே.ஏ.லோகேஸ்வரன் உள்ளிட்ட அதிமுகவினா் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.