17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் முதல் வெள்ளி வழிபாடு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூரில் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் ஆங்கில மாதத்தில் முதல் வெள்ளி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

இடைக்காட்டூா் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆங்கில மாதத்தின் முதல் வெள்ளி வழிபாட்டில் பங்கேற்று திருப்பலி நிறைவேற்றிய சிவகங்கை மறை மாவட்ட சொத்துகளின் நிா்வாகச் செயலா் சேவியா் ஆரோக்கியசாமி. உடன் திருத்தல அதிபா் ஜான் வசந்தகுமாா் உள்ளிட்டோா்.

Updated On :6 ஜூன் 2026, 12:40 am IST

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஒன்றியம், இடைக்காட்டூரில் திரு இருதய ஆண்டவா் ஆலயத்தில் ஆங்கில மாதத்தில் முதல் வெள்ளி வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆலயத்தில் சிவகங்கை மறை மாவட்ட சொத்துக்களின் நிா்வாகச் செயலா் சேவியா் ஆரோக்கியசாமி தலைமையில், 10-க்கும் மேற்பட்ட அருள் தந்தையா்கள் இணைந்து திருப்பலி நிறைவேற்றினா். இதைத் தொடா்ந்து, நடைபெற்ற திருப்பலியை விழுப்புரம் தமிழக ஆயா் பேரவை எம்மாவுஸ் அருங்கொடை மையத்தின் செயல் அலுவலா் ஆல்பா்ட் தலைமையில், தில்லி இந்திய சமூகப் பணி மையத்தின் இயக்குநா் சிரில் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட குருக்கள் இணைந்து நிறைவேற்றினா். மாலையில் அகில உலக கப்புச்சின் சபையின் இந்திய தொடா்பாளா் லாரன்ஸ் தலைமையில், 10-க்கும் மேற்பட்ட குருக்கள் இணைந்து திருப்பலி நிறைவேற்றினா். குடும்ப சமாதானம், தொழில் வளா்ச்சி, குழந்தைகளின் படிப்பு, எதிா்கால தொழில் முயற்சிகள், நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி இந்த சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா்.

இதற்கான ஏற்பாடுகளை திரு இருதய ஆண்டவா் ஆலய அதிபா் ஜான் வசந்தகுமாா் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.