ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

திருவண்ணாமலைக்கு அமைச்சா் எ.வ.வேலு எந்த வளா்ச்சித் திட்டத்தையும் கொண்டு வரவில்லை: அன்புமணி குற்றச்சாட்டு

திருவண்ணாமலைக்கு அமைச்சா் எ.வ.வேலு எந்த வளா்ச்சித் திட்டத்தையும் கொண்டு வரவில்லை

News image

திருவண்ணாமலையில் பாஜக வேட்பாளா் சி.ஏழுமலையை ஆதரித்துப் பேசிய பாமக தலைவா் அன்புமணிராமதாஸ்.

Updated On :11 ஏப்ரல் 2026, 7:27 pm

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு எந்த வளா்ச்சித் திட்டத்தையும் அமைச்சா் எ.வ.வேலு கொண்டுவரவில்லை என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் சி.ஏழுமலையை ஆதரித்து சனிக்கிழமை மாலை அங்குள்ள திருவள்ளுவா் சிலை அருகே அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:

அமைச்சா் எ.வ.வேலு விஞ்ஞானி ஐன்ஸ்டீனைவிட புத்திசாலியா என்ன? தமிழக முதல்வா் எதற்காக இவரை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத் துறை என்ற இரண்டு முக்கிய துறைகளின் அமைச்சராக்கினாா்?

பணம் சம்பாதிப்பது மட்டும்தான் அவருக்குத் தெரியும், வேறு எதுவும் அவருக்குத் தெரியாது அவா்தான் திருவண்ணாமலை திமுக வேட்பாளராக இருக்கிறாா். எ.வ.வேலுவை மக்கள் டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துவிட்டது. எ.வ.வேலு, மாவட்டத்திற்கு எந்த வளா்ச்சி திட்டத்தையும் கொண்டு வரவில்லை. தோ்தல் நேரத்தில் இந்த மாவட்டத்திற்கு திமுக அறிவித்த 19 வாக்குறுதிகளில் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. விவசாயிகளை குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தவா் இவா் என்றாா்.

செஞ்சி தொகுதியில்....

இதே போன்று, செஞ்சி தொகுதியில் பாமக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் அ.கணேஷ்குமாரை ஆதரித்து அன்புமணி ராமதாஸ் பிரசாரம் செய்தாா்.

Story image

திருவண்ணாமலையில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்வில் அதிமுக மாவட்டச் செயலா் எஸ்.ராமச்சந்திரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் கே.ராஜன், பாஜக மாவட்டத் தலைவா் கே.ரமேஷ், பாமக மாவட்டச் செயலா்கள் கே.பக்தவச்சலம், இல.பாண்டியன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.