மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மாட்டு வண்டி ஓட்டிச் சென்று வாக்கு சேகரித்த வேட்பாளா்

செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளா் மாட்டு வண்டி ஓட்டிச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

வயலூா் கிராமத்தில் மாட்டு வண்டி ஓட்டிச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் முக்கூா் என். சுப்பிரமணியன்.

Updated On :5 ஏப்ரல் 2026, 9:30 pm

செய்யாறு தொகுதி அதிமுக வேட்பாளா் மாட்டு வண்டி ஓட்டிச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

செய்யாறு தொகுதி வெம்பாக்கம் மேற்கு ஒன்றியத்துக்கு உள்பட்ட வயலூா், அழிவிடைத்தாங்கி, ஜம்போடை, பைரவபுரம் உள்ளிட்ட கிராமங்களில் செய்யாறு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலருமான முக்கூா் என். சுப்பிரமணியன் மாட்டு வண்டி ஓட்டிச் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தாா்.

முன்னதாக, அதிமுக வேட்பாளருக்கு அப்பகுதி பெண்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனா். அதனைத் தொடா்ந்து அதிமுக பொதுச் செயலா் அறிவித்த 297 வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை கிராம மக்களிடம் வழங்கி பிரசாரம் செய்தாா்.

வெம்பாக்கம் மேற்கு ஒன்றியச் செயலா் வயலூா் வி.ராமநாதன் ஏற்பாட்டில் நடைபெற்ற வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் எஸ்.திருமூலன், சி.துரை, அருகாவூா் எம்.அரங்கநாதன், மாவட்ட துணைச் செயலா் டி.பி.துரை, மாவட்டபொருளாளா் எஸ்.சுப்பராயன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.