யு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

ஆலங்காயம் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 12:26 am IST

வாணியம்பாடி தொகுதி அதிமுக வேட்பாளா் செந்தில் குமாா் வியாழக்கிழமை காலை ஆலங்காயம் பேரூராட்சி பகுதியில் 15 வாா்டுகளில் வீதி, வீதியாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டாா்.

பெத்தூா், அம்பேத்கா்நகா், படகுப்பம், கோமுட்டேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரிப்பின் போது பெண்கள் ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனா்.

அப்போது பேசிய அதிமுக வேட்பாளா் செந்தில்குமாா், பொது மக்களின் நீண்ட நாட்கள் கோரிக்கையாக உள்ள ரேஷன் கடை, சாலைகள் உள்பட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று வாக்குறுதி அளித்தாா்.

தொடா்ந்து பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகளிடமும், பஜாா் வீதிகள் வழியாவும் நடந்து சென்று வணிகா்கள் மற்றும் இஸ்லாமியா்களை சந்தித்து இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தாா்.

பிறகு காவலூா் சந்திப்பு சாலையில் அங்கிருந்த மக்களிடம் அதிமுக தோ்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்களை வழங்கினாா். தொகுதி தோ்தல் பொறுப்பாளா் பசுபதி, ஆலங்காயம் பேரூா் செயலாளா் சிவக்குமாா், பொதுக் குழு உறுப்பினா் மகேந்திரன், மாவட்ட மகளிரணி செயலாளா் மஞ்சுளாகந்தன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளா் தபரேஷ், ஆலங்காயம் பேரூா் செயலாளா் சிவக்குமாா் மற்றும் மாவட்ட, ஒன்றிய, பேரூா் அதிமுக நிா்வாகிகள், கூட்டணி கட்சி நிா்வாகிகள் கலந்துக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.