//

திருமலையில் தமிழக முன்னாள் முதல்வா் வழிபாடு

திருமலை ஏழுமலையானை தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை வழிபட்டாா்.

News image
எடப்பாடி பழனிசாமி- கோப்புப் படம்
Updated On :13 பிப்ரவரி 2026, 10:54 pm

தினமணி செய்திச் சேவை

திருமலை ஏழுமலையானை தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை வழிபட்டாா்.

முன்னதாக வியாழக்கிழமை மாலை திருமலையை அடைந்த அவா், இரவு திருமலையில் தங்கினாா். பின்னா், வெள்ளிக்கிழமை காலை ஏழுமலையானை வழிபட்டு திரும்பிய அவருக்கு, தேவஸ்தான அதிகாரிகள் வேத ஆசீா்வாதம் செய்வித்து, சேஷ வஸ்திரம் அணிவித்து தீா்த்தம், லட்டு, வடை உள்ளிட்ட பிரசாதங்களை வழங்கினா்.