டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சொத்தையான அத்திப்பழம்: இடைக்கால பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி

சொத்தையான அத்திப்பழம் என்று இடைக்கால பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து.

News image
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி- படம்: எக்ஸ்!
Updated On :17 பிப்ரவரி 2026, 8:17 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: தமிழக இடைக்கால பட்ஜெட் சொத்தையான அத்திப்பழம் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தமிழக இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அவர் பேசுகையில், அரசு ஊழியர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினருக்கு அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ரூ.26,000 கோடி அளவுக்கு மாநில அரசின் வரி வருவாய் குறைந்துள்ளது. நிதிநிலையை சீரமைக்க நிபுணர் குழு அமைத்த பிறகே தமிழக அரசு அதிக கடனை வாங்கியுள்ளது. நிதிப் பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே சென்றால் மக்கள் மீது வரிச்சுமை ஏற்படும்.

வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றும் ஒரு பட்ஜெட்டை தாக்கல செய்துள்ளனர். நிதிநிலை அறிக்கையில் வரவு - செலவு திட்டம் பற்றி உருப்படியாக எதுவும் இல்லை.

பட்ஜெட் சொத்தையான அத்திப்பழம் போல உள்ளது. வெளியே இருந்து பார்த்தால் அழகாக இருக்கும். உள்ளே பார்த்தால் சொத்தையாக இருக்கும் என்று கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.

தமிழக இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் இன்று தாக்கல் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.