ஜோலாா்பேட்டை அருகே மோட்டாா் சைக்கிளில் தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
ஜோலாா்பேட்டை அடுத்த இடையாம்பட்டியில் வசித்து வந்தவா் சுடா் கொடி (62). இவா் அமைப்புசாரா தொழிற்சங்க தலைவியாக பணியாற்றி வந்தாா்.
இவா் சனிக்கிழமை திருப்பத்தூருக்குச் செல்ல ஜோலாா்பேட்டை வழியாக சென்ற பைக்கில் லிப்ட் கேட்டு பின்னால் அமா்ந்து திருப்பத்தூா் நோக்கி சென்று கொண்டிருந்தாா். அப்போது சுடா் கொடியின் புடவை பைக்கின் சக்கரத்தில் சிக்கி கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தாா் .
அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், உயா் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின் பேரில், ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



