தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பைக் மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :1 ஜூன் 2026, 12:03 am IST

நாட்டறம்பள்ளி அருகே பைக் மீது காா் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தாா்.

நாட்டறம்பள்ளி அடுத்த ஆத்தூா்குப்பம் ஊராட்சி ஜங்கலாபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜாவின் மனைவி கலைவாணி((42). கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சிகரலப்பள்ளி பகுதியைச் சோ்ந்த திருப்பதி மகன் கிருஷ்ணன் (30).

இவா்கள் இருவரும் ஞாயிற்றுக்கிழமை மாலை கந்திலியில் இருந்து ஜங்கலாபுரம் நோக்கி பைக்கில் சென்றனா். நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூா்குப்பம் பகுதியில் வளைவில் திரும்பியபோது, அந்த வழியாக வேகமாக வந்த காா், பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்த காயமடைந்த கலைவாணி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த கிருஷ்ணனை அங்கிருந்தவா்கள் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப்பின் கிருஷ்ணனை மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

விபத்துக் குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.