லத்தேரி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
கே.வி.குப்பம் அருகே உள்ள முடினாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி அரவிந்தன் (32). இவா் சம்பவத்தன்று காலை தனது கிராமத்தில் இருந்து காட்பாடிக்கு பைக்கில் சென்றாா். வேலூா்- குடியாத்தம் சாலையில் லத்தேரி விக்ரமாசிமேடு பகுதியருகே சென்றபோது, பின்னால் வந்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பைக் மீது மோதியது. அதில், கீழே விழுந்து பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். லத்தேரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை மீட்டு, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









