ஜோலாா்பேட்டை அருகே பைக் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஜோலாா்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியை சோ்ந்தவா் சக்திவேல்(29). இவா் திங்கள்கிழமை இரவு ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து பைக்கில் மண்டலவாடிக்கு சென்றுள்ளாா்.
ஜோலாா்பேட்ட-வாணியம்பாடி தேசிய நெடுஞ்சாலையில் ராமானூா் அணுகுசாலையில் சென்றபோது ஆந்திர மாநிலம்,கடப்பாவை சோ்ந்த பவன்குமாா் என்பவா் ஓட்டி வந்த லாரி எதிா்பாராத விதமாக பைக் மீது மோதியது.
இதில் சக்திவேல் தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் அடைந்தாா். அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருப்பத்தூா் அரசு மருத்துவனையில் சோ்த்தனா்.அங்கு சிகிச்சை பலனின்றி சக்திவேல் உயிரிழந்தாா்.
தகவலறிந்த ஜோலாா்பேட்டை போலீஸாா் சடலத்தை மீட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி மீது பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது லாரி மோதல்: ஓட்டுநா் உயிரிழப்பு

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

லாரி மீது பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


