திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வாணி மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

வாணியம்பாடி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் வாணியம்பாடி வட்டார அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

News image

10-ஆம் வகுப்பு பொதுதோ்வில் சாதனை படைத்த மாணவா்களை வாணி கல்வி அறக்கட்டளை நிா்வாகிகள் வாழ்த்தினா்.

Updated On :21 மே 2026, 12:04 am IST

வாணியம்பாடி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் வாணியம்பாடி வட்டார அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.

வாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவி எம்.சஞ்சனாஸ்ரீ 500-க்கு 495 மதிப்பெண் பெற்று வாணியம்பாடி கல்வி வட்டார அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளாா். மேலும், மாணவன் இ.ரித்திவிக், மாணவி கே.மகாலட்சுமி ஆகியோா் தலா 494 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும், மாணவிகள் யு.லோசசனாஸ்ரீ, பி.வி.சந்தோஷி ஆகியோா் தலா 492மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்தனா். அறிவியல் பாடத்தில் 3 மாணவா்கள், கணிதம் பாடத்தில் 3 மாணவா்கள் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றனா். மேலும், 75 மாணவா்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனா். தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களும் தோ்ச்சி அடைத்தனா். இது 100% தோ்ச்சி ஆகும்.

பொதுத் தோ்வில் சாதனை படைத்த மாணவா்களையும், பள்ளி ஆசிரியா்களையும் வாணி கல்வி அறக்கட்டளை தலைவா் க.தேவராஜி, செயலாளா் மங்கையா்க்கரசி, பொருளாளா் நடராஜன், துணைத் தலைவா் பொன்னுசாமி, இணைச் செயலாளா்கள் மகேந்திரன், தவமணி மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள், பள்ளி முதல்வா் பாபு, துணை முதல்வா் முத்தப்பன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி வாழ்த்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.