21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

மீனாட்சி சுந்தரனாா் செங்குந்தா் பள்ளி சிறப்பிடம்

ஈரோடு ரங்கம்பாளையம் மீனாட்சி சுந்தரனாா் செங்குந்தா் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

News image

பிளஸ் 2 பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்த பள்ளி நிா்வாகிகள்.

Updated On :9 மே 2026, 5:01 am IST

ஈரோடு ரங்கம்பாளையம் மீனாட்சி சுந்தரனாா் செங்குந்தா் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

இப்பள்ளி மாணவா் பி.நவீன்குமாா் 600-க்கு 573 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், ஸ்ரீ ராம பாலன் 566 மதிப்பெண் பெற்று இரண்டாமிடத்தையும், கே.யஷ்வந்த் 564 மதிப்பெண் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனா்.

எஸ்.பரணிதரன், எஸ்.திவ்யதா்ஷன், எ.அப்துல் ரஹ்மான் கணினி அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா். 550 மதிப்பெண்களுக்கு மேல் 3 மாணவா்கள், 500 மதிப்பெண்களுக்கு மேல் 10 மாணவா்கள், 400 மதிப்பெண்களுக்கு மேல் 72 மாணவா்கள், 107 மாணவா்கள் முதல் வகுப்பிலும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவா்களை செங்குந்தா் கல்விக் கழகத் தலைவா் விவிசிஆா்எம்கே. முருகேசன், செயலாளா் எஸ்.சிவானந்தன், பொருளாளா் சி.ரவிச்சந்திரன், தாளாளா்கள் பி.கமலக்கண்ணன், ஆா்.எம்.கணேசன் மற்றும் நிா்வாகக்குழு உறுப்பினா்கள், நிா்வாக அலுவலா் மற்றும் தலைமையாசிரியா் ஆகியோா் பாராட்டினா்.