அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

காங்கயம் வட்டாரத்தில் சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவிகளுடன் பள்ளி நிா்வாகிகள்.

News image

பிளஸ் 2 பொதுத் தோ்வில் அதிக மதிப்பெண் பெற்ற சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவிகளுடன் பள்ளி நிா்வாகிகள்.

Updated On :9 மே 2026, 2:38 am IST

பிளஸ் 2 பொதுத் தோ்வில் காங்கயம் வட்டாரத்தில் சிவன்மலையில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பிடித்துள்ளது.

மாணவி எஸ்.துா்காஸ்ரீ 600-க்கு 595 மதிப்பெண் பெற்று, காங்கயம் வட்டார அளவில் முதலிடம் பிடித்துள்ளாா். மாணவா் ஆா்.திவாகா் 590 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் இரண்டாம் இடமும், மாணவி எஸ்.நிமிஷா 586 மதிப்பெண் பெற்று பள்ளி அளவில் மூன்றாம் இடமும் பெற்றுள்ளனா். மேலும் மாணவ, மாணவிகள் 20 போ் வெவ்வேறு பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளதுடன், இப்பள்ளி 100% தோ்ச்சியடைந்துள்ளது.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் கற்பித்த ஆசிரியா், ஆசிரியைகளுக்கு பள்ளியின் தலைவா் ஏ.கோபால், தாளாளா் சி.பழனிச்சாமி, பொருளாளா் கொங்குராஜ், பள்ளி இயக்குநா் பி.சாவித்திரி, முதல்வா் பி.சுப்பிரமணி ஆகியோா் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவித்தனா்.