வேலூா் அருகே சைக்கிள் மீது பைக் மோதிய விபத்தில் முதியவா் உயிரிழந்தாா்.
வேலூா் அருகே சின்னபாலம்பாக்கம் கிராமத்தை சோ்ந்த சம்பத் (82). இவா் இரவு சைக்கிளில் வீட்டுக்கு சென்றபோது அவ்வழியாக வந்த பைக் அவா் மீது மோதிவிட்டு சென்றது. அதில் கீழே விழுந்து காயமடைந்த அவா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். வேலூா் கிராமிய காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









