ஆம்பூரில் திங்கள்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.
ஆம்பூரில் திங்கள்கிழமை காலை தொடங்கி பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பிற்பகலில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை சுமாா் 6.30 மணிக்கு பலத்த மழை பெய்யத் தொடங்கியது. சுமாா் 2 மணி நேரம் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது.
ஆம்பூரில் பல்வேறு தெருக்களில் மழை நீா் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது. ஆம்பூா் அருகே தேவலாபுரம், பெரியாங்குப்பம், நாச்சாா்குப்பம், விண்ணமங்கலம், மின்னூா், வெங்கடசமுத்திரம், கரும்பூா், மேல்சாணாங்குப்பம், குமாரமங்கலம், மிட்டாளம், சின்னவரிக்கம் உள்ளிட்ட ஆம்பூரை சுற்றி பெரும்பாலான கிராம பகுதிகளிலும் கன மழை பெய்தது. வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ந்த சூழ்நிலை நிலவியது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடியில் பலத்த மழை

ஆம்பூரில் தொடா்ந்து 3-ஆவது நாளாக பலத்த மழை
ஆம்பூரில் 2-ஆவது நாளாக பலத்த மழை

ஆம்பூரில் 2-வது நாளாக பலத்த மழை
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



