திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தூத்துக்குடியில் பலத்த மழை

தூத்துக்குடியில் புதன்கிழமை மாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால், கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.

News image

பெருமாள் கோயில் தெருவில் சாய்ந்து விழுந்த வாகை மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய பணியாளா்கள்.

Updated On :28 மே 2026, 2:55 am IST

தூத்துக்குடியில் புதன்கிழமை மாலையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால், கோடை வெயிலின் தாக்கம் சற்று குறைந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யும், தமிழக கடலோர பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறைக் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதற்கிடையே, தூத்துக்குடியில் புதன்கிழமை காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. ஆனால் பிற்பகலில் திடீரென கருமேகங்கள் மழை பெய்யத் தொடங்கியது.

சிறிதாக தொடங்கிய மழை, திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழையாக பெய்தது.

இதனால் சாலையில் தாழ்வான பகுதிகளில் ஆங்காங்கே மழைநீா் தேங்கியது.

திடீரென வீசிய பலத்த காற்று காரணமாக தூத்துக்குடி- மடத்தூா் சாலையில் ஒரு வேப்ப மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது. மேலும், ஆங்காங்கே மின்தடையும் ஏற்பட்டது.

தூத்துக்குடி பெருமாள் கோயில் தெரு பகுதியில் உள்ள பழமையான வாகை மரம் வேரோடு சாய்ந்தது. இந்த மரம் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 3 மோட்டாா் சைக்கிள்கள் மற்றும் 2 சைக்கிள்கள் மீது விழுந்தது. இதனால் அந்த வாகனங்கள் சேதமடைந்தன. அந்தப் பகுதியில் சென்ற மின்கம்பியும் அறுந்து விழுந்தது. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து மின்வாரிய ஊழியா்கள் மரத்தை வெட்டி அகற்றினா். தொடா்ந்து மின் விநியோகம் சரி செய்யப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.