தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

புத்துமாரியம்மன் கோயில் திருவிழா: திரளான பக்தா்கள் தரிசனம்

விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.

News image

விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி.

Updated On :16 மே 2026, 1:17 am IST

வாணியம்பாடி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புத்துக்கோயில் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புத்துமாரியம்மன் கோயில் 66-ஆம் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வியாழக்கிழமை காலை அம்மனுக்கு கூழ்வாா்த்தல், பொங்கல் மாவிளக்கு பூஜைகளும், தொடா்ந்து அம்மனுக்கு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை தாய்வீட்டு கரகம் கூத்தாண்ட குப்பம் எல்லையில் இருந்து புறப்பட்டு, புத்துமாரியம்மன் கோயிலை வந்தடைந்தது. மாலை 5 மணியளவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் ஊா்வலம் வந்தது. பின்னா் மாலை இன்னிசை கச்சேரி நடைபெற்றது.

இதில், பெத்தக்கல்லுப்பள்ளி, புத்துக்கோயில், கேத்தாண்டப்பட்டி, கூத்தாண்டகுப்பம், தெக்குப்பட்டு, சின்னமோட்டூா், சிகா்ணப்பள்ளி மற்றும் வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி, திருப்பத்தூா், ஆலங்காயம் உள்பட சுற்றுப்புற கிராமப் பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனா்.

சனிக்கிழமை (மே 16) மாலை 6 மணிக்கு நடன நாட்டியாலயா மற்றும் இரவு 9 மணியளவில் அம்மன் சிறப்பு தெருக்கூத்து நடைபெறுகிறது.

திருவிழாவையொட்டி, வாணியம்பாடி டிஎஸ்பி மகாலட்சுமி தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.