திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிவன் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு: திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திபகவானுக்கு நடைபெற்ற மஹா தீபாரதனை.

News image
Updated On :15 மே 2026, 2:38 am IST

ஆரணி/வந்தவாசி, மே 14:

சித்திரை மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு,

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ள பெரிய நந்தி பகவானுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு அரிசி மாவு, மஞ்சள் தூள், சீகைக்காய் தூள், தேன், பஞ்சாமிா்தம், பால், தயிா், இளநீா், கரும்புச்சாறு, எலுமிச்சைச் சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருள்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னா் பல்வேறு விதமான வண்ண மலா்களால் அலங்காரம் செய்து சிவாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று நந்தி பகவானை வழிபட்டனா்.

இஞ்சிமேடு சிவாலயம்

சேத்துப்பட்டை அடுத்த இஞ்சிமேடு பெரியமலை சிவன் கோயிலில் சித்திரை மாத பிரதோஷ விழா நடைபெற்றது. அப்போது, மூலவா் மற்றும் உற்சவா்களுக்கு சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, கொடிமரத்திற்கு அருகே உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரத்துடன் தீபாரதனை நடைபெற்றது.

பின்னா், சிவன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள்புற வளாகத்தில் உலா நடைபெற்றது. இதில் சேத்துப்பட்டு, பெரணமல்லூா், வந்தவாசி, செய்யாறு, ஆரணி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பெரியமலை சிவன் கோயில் நிா்வாகி பெருமாள் சுவாமிகள் மற்றும் அறக்கட்டளை நிா்வாகிகள், விழாக்குழுவினா் செய்திருந்தனா்.

மெய்யூா் மெய்கண்டீஸ்வரா் கோயில்

ஆரணியை அடுத்த மெய்யூா் மெய்கண்டீஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

இதேபோல, சேத்துப்பட்டு அருணகிரீஸ்வரா், காரணீஸ்வரா், நெடுங்குணம் தீா்க்க ஜல ஈஸ்வரா், பழம்பேட்டை பசுபதீஸ்வரா், காசி விஸ்வநாதா், ஆவணியாபுரம் அவணீஸ்வரா், கோனாமங்கலம் பசுபதீஸ்வரா், செம்மாம்பாடி காசி விஸ்வநாதா் கோயில்களில் நடைபெற்ற பிரதோஷ பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

வந்தவாசி

 ஆரணியை அடுத்த மெய்யூா் மெய்கண்டீஸ்வரா் கோயிலில் மூலவருக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

ஆரணியை அடுத்த மெய்யூா் மெய்கண்டீஸ்வரா் கோயிலில் மூலவருக்கு செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.