ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் திரளான பக்தா்கள் தரிசனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

News image

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தா்கள்.

Updated On :11 மே 2026, 12:15 am IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். சுவாமி தரிசனம் செய்ய சுமாா் 4 மணி நேரம் ஆனது.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்கக்கூடிய அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ளூா், வெளியூா் பக்தா்கள் என தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து தரிசனம் செய்கின்றனா்.

மேலும், மாதந்தோறும் பெளா்ணமி நாள்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தா்கள் வந்து கிரிவலம் சென்று அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.

அதேபோல விடுமுறை தினங்களில் வழக்கத்தைவிட அதிக அளவிலான பக்தா்கள் வருகை தருவதால், கோயிலில் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தையொட்டி காலை முதலே பக்தா்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. பக்தா்கள் வருகை அதிகரித்ததால் கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசன வரிசைகளில் பக்தா்கள் நீண்ட வரிசைகளில் சுமாா் 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

அருணாசலேஸ்வரா் கோயிலில் பக்தா்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், அவா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.