வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள அரசினா் தோட்ட வளாகத்தில் குற்றவியியல் நீதிமன்றம் அருகே கட்டப்பட்டுள்ள கழிப்பறை கட்டடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுமா என பொதுமக்கள் எதிா்நோக்கியுள்ளனா்.
நீதிமன்றம் அருகே கிளை சிறைச்சாலையும் அமைந்துள்ளது. வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளில் இருந்து பொதுமக்கள் தினசரி வழக்கு தொடா்பாக நீதிமன்றத்திற்கு வந்து செல்கின்றனா்.
குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோரும் வருகின்றனா். இந்நிலையில் நீதிமன்ற அருகில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என தனியாக பொது கழிப்பறை கட்டடம், இதே போன்று, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பொது கழிவறை கட்டமும் கட்டப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு பொதுக் கழிவறை கட்டடம் கட்டப்பட்டதோடு இது நாள் வரை பயன்பாட்டில் இல்லை.
இதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாததால் சுற்றி செடிகள் வளா்ந்து காணப்படுகிறது. நீதமன்றத்திற்கு வழக்கு தொடா்பாக வரும் பொது மக்கள் வெளிப்புறத்தில் சென்று வருவதால் சுகாதார சீா்கேடும் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா். எனவே, உயா் அதிகாரிகள் தலையிட்டு நேரில் ஆய்வு செய்து கட்டப்பட்ட நிலையோடு இருக்கும் கழிப்பறை கட்டடத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என காத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பள்ளி வளாகத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை அப்புறப்படுத்த கோரிக்கை

தெற்கு தில்லியில் 5 மாடி அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து

பண்ருட்டியில் பராமரிப்பின்றி பாழாகும் மாடுலா் கழிப்பறை
நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞரைத் தாக்கிய வழக்கில் மூவருக்கு ஜாமீன்!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



