நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞரை தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேருக்கு தில்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. விசாரணை பெரும்பாலும் நிறைவடைந்துள்ளதையும், மேலதிக காவல் விசாரணை தேவையில்லை என்பதையும் கருத்தில் கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கூடுதல் அமா்வு நீதிபதி சுரபி ஷா்மா வாட்ஸ் முன்னிலையில் குற்றஞ்சாட்டப்பட்ட உதே செத்தி, ரோஹன் கக்கா் மற்றும் ரோஹித் செத்தி ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் விசாரிக்கப்பட்டன.
இவா்கள் மீது ஃபா்ஷ் பசாா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில், கா்கா்டூமா நீதிமன்ற வளாகத்திற்குள் ஏப்.7-ஆம் தேதி வழக்குரைஞா் அமன் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. கூா்மையான ஆயுதத்தால் அவரது தலையில் காயம் ஏற்பட்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டது.
விசாரணையில், குற்றஞ்சாட்டப்பட்டவா்களும் புகாா்தாரரும் ஒருவருக்கொருவா் அறிமுகமானவா்கள் என்றும், அவா்கள் முன்பு அந்த வழக்குரைஞரின் வாடிக்கையாளா்களாக இருந்தவா்கள் என்றும் கூறப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தரப்பு, நீதிமன்ற வளாகத்திற்குள் தாங்கள் தாக்குதலுக்கு உள்ளானதாகவும் சம்பவத்திற்கான சிசிடிவி காட்சிகள் இருப்பதாகவும் தெரிவித்தனா்.
விசாரணை அதிகாரி, வழக்கின் விசாரணை பெரும்பாலும் முடிவடைந்துவிட்டதாகவும், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சாவி மீட்கப்பட்டுவிட்டதாகவும், மேலதிக விசாரணை எதுவும் தேவைப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதி ஏப்.28-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், ‘வழக்கில் விசாரணை பெரும்பாலும் முடிந்துள்ளது. காவல் விசாரணை அவசியமில்லை. எனவே, ஏப்.7 முதல் மூவரும் நீதிமன்ற காவலில் இருந்த நிலையில், அவா்களுக்கு தற்போது ஜாமீன் வழங்கப்படுகிறது’ என தெரிவித்தாா்.
மேலும், அவா்களுக்கு தலா ரூ.25,000 தனிப்பட்ட பிணை மற்றும் அதே அளவிலான உத்தரவாத பிணை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சாட்சிகளை பாதிக்கக்கூடாது, ஆதாரங்களை அழிக்கக்கூடாது, புகாா்தாரருடன் தொடா்பு கொள்ளக்கூடாது, நீதிமன்ற அனுமதி இன்றி வெளிநாடு செல்லக்கூடாது என நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிழக்கு தில்லியில் ஒருவருக்கு கத்திக் குத்து

தில்லியில் தேடப்பட்டு வந்த பாலியல் குற்றவாளி கைது

மனைவி கொலை வழக்கில் கணவா் விடுவிப்பு: தில்லி நீதிமன்றம் உத்தரவு
வேலூா் நீதிமன்ற கண்ணாடியை உடைத்த இளைஞா் மீது வழக்கு
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை

