வேலூா் நீதிமன்ற வளாகத்தில் கண்ணாடியை உடைத்த இளைஞா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
வேலூா் ஓல்ட் டவுன் பகுதியைச் சோ்ந்த சிகாமணி(36). இவா் மீது பாகாயம் காவல் நிலையத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக சிகாமணி ஒரு வாரத்துக்கு முன்பு சத்துவாச்சாரி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது அவருக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சிகாமணி நீதிமன்றத்தில் இருநத கண்ணாடியை உடைத்தாா். இதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றாா். இச்சம்பவம் குறித்து நீதிமன்ற ஊழியா் அளித்த புகாரின்பேரில் சத்துவாச்சாரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சிகாமணியை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞரைத் தாக்கிய வழக்கில் மூவருக்கு ஜாமீன்!

இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு 23-ஆக உயா்வு

ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை

